நீதி வழங்காத நீதிமன்றங்கள் – முஸ்லிம்களை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சூழல் மாறலாம்; அரசின் விருப்பத்திற்கு ஏற்ப அதிகார அமைப்பும் மாற்றப்படலாம். ஆனால், எக்காலத்திலும் நீதிமன்றங்கள் அரசுத் தரப்பின் திருப்தியை எதிர்பார்த்து நீதிபரிபாலனம் செய்யக் கூடாது.அரசின் நிர்பந்தத்திற்கோ, அரசியல் சூழ்ச்சிகளுக்கோ..

2 minutes

Read Time

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சூழல் மாறலாம்; அரசின் விருப்பத்திற்கு ஏற்ப அதிகார அமைப்பும் மாற்றப்படலாம். ஆனால், எக்காலத்திலும் நீதிமன்றங்கள் அரசுத் தரப்பின் திருப்தியை எதிர்பார்த்து நீதிபரிபாலனம் செய்யக் கூடாது.
அரசின் நிர்பந்தத்திற்கோ, அரசியல் சூழ்ச்சிகளுக்கோ நீதித்துறை பலி ஆகிடக் கூடாது என்பதற்காகத்தான் நமது அரசியல் சாசனம் நீதித்துறைக்கு உச்சபட்ச சுயஅதிகாரம் வழங்கி இருக்கிறது.
ஆனால், கடந்த 10, 12 ஆண்டுகளாக நீதித்துறையின் போக்கு தனது சுயஅதிகாரத்தை இழந்து, ஆளும் தரப்பின் ஒரு அங்கம் போல செயல்படுவதாக நடுநிலையாளர்கள் அனைவரும் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான பல தீர்ப்புகள் நீதித்துறையின் பாரபட்சமான போக்கிலும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானதாகவும், சர்வதேசம் அங்கீகரித்துள்ள இயற்கை நீதி (Natural justice)க்கு எதிரானதாகவும் உள்ளதை மனசாட்சி உள்ள யாராலும் மறுக்க இயலாது.
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் உலகமே காறி உமிழும் வகையில் பள்ளியை சட்டவிரோதமாக இடித்தவனுக்கு அனுகூலமாகவும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மேலும் வஞ்சிக்கும் வகையிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
ஆனாலும், நாட்டின் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கருதி அந்த அநியாயத்தை முஸ்லிம்கள் சகித்துக் கொண்டார்கள்.
பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு முன்னோடியான நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் Places of Worship (Special Provisions) Act,
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின் படி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையைப் பேணுவதற்கும், எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடைசெய்வதற்கும் வகை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு சமயத்தினரின் அல்லது ஒரு சமயப் பிரிவின் வழிபாட்டுத் தலத்தை, வேறு சமயத்தினரோ அல்லது ஒரே சமயத்தின் வேறொரு பிரிவினரோ 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்திருந்தால் இச்சட்டப்படி, ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது.

இந்த சட்டத்தின் படி
பாபரி மஸ்ஜித் தவிர
வேறு எந்த பழமையான வழிபாட்டுத்
தலங்களுக்கும் அனுபவிப்பவர்கள்
தவிரயாரும் உரிமை கோர முடியாது.
இதை மீறி பிற வழிபாட்டுதலங்களை
கைப்பற்ற முயன்றால் மூன்று
ஆண்டுகள் தண்டனை விதிக்கவும்
இந்த சட்டம் வகை செய்கிறது.
ஆனால், இவை அனைத்தையும் குப்பையில் தூக்கி கடாசிவிட்டு தொடர்ந்து முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை இந்துத்துவ மாஃபியாக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதும், அதை தடுத்து நிறுத்தி ஆக்கிரமிப்பாளர்களைக் கைது செய்து தண்டிக்க வேண்டிய நீதிமன்றங்கள் அதற்கு நேர்முரணாக, பல நூற்றாண்டுகளாக பள்ளிவாசல்களை பயன்படுத்தி வரும் முஸ்லிம்களிடமிருந்து பறித்து அபகரிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் அநியாயத்தை அரங்கேற்றி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் மத்தியப் பிரதேசம் தார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமால் மௌலா மஸ்ஜிதில் தொழுகைக்கு தடை விதித்து அதை கோயிலாக பிரகடனம் செய்யப்பட்ட அநீதி அரங்கேற்றப்பட்டுள்ளது.
UAPA சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுவதையும், அதில் பலர் அநியாயமாக பிணை மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வருவதையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டி இருந்தது.
ஆனால், அதன்பிறகும் கூட பாசிச பாஜக அரசால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உமர் காலிதுக்கு டில்லி உயர்நீதிமன்றம் பிணை மறுத்துள்ளது.
பாபரி மஸ்ஜித் இடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு போன்ற அதிபயங்கரவாதங்களில் பகிரங்கமாக ஈடுபட்ட பாசிஸ்டுகள் சுதந்திரமாக உலா வருவதும், உமர் காலித் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதும் இந்திய நீதித்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை உணர்த்துகிறது.
நீதித்துறையின் இந்த நிலைமை வேதனை தருகிறது.
ஆளும் தரப்பிற்கு அல்லது ஆக்கிரமிப்பு தரப்பிற்கு அடிபணியாமல் எப்போதும் பாரபட்சமோ, பக்க சார்போ இன்றி நீதியை நிலைநாட்டுவது மட்டுமே நீதிமன்றங்களின் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும், இந்திய இறையாண்மையும், மனித உரிமைகளும், ஜனநாயக மாண்புகளும் காப்பாற்றப்பட்டு சர்வதேச அரங்கில் நமது தேசம் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) கேட்டுக் கொள்கிறது.

இவண்,
பொறையார் அலிஅஹமது,
துணை பொதுச்செயலாளர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர்,
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF).

About the Author